Friday, December 6, 2019

செவ்வாய் தோஷம்

செவ்வாய் தோஷம் - பகுதி 2


செவ்வாய் தோஷ விதிவிலக்குகள்

ஜோதிடத்திலே நிறைய விதி விலக்குகள் தரப்பட்டுள்ளன.
அவற்றுள் சில முக்கியமானவைகள் .
  • செவ்வாய் தான் ஆட்சி, உச்சம், நீச்சம் பெற்ற வீடுகளில் அமர்ந்தால் தோஷமில்லை.
          மேஷம், விருச்சிகம்  - ஆட்சி வீடுகள்
          கடகம் - நீச்ச வீடு
          மகரம் - உச்ச வீடு

       
இந்த வீடுகளில் செவ்வாய் அமர்ந்தால் தோஷமில்லை.

  • சிம்மம் - சூரியனின்  நட்பு வீட்டில் செவ்வாய் அமர்ந்தால் தோஷமில்லை.
  • தனுசு, மீனம் - குருவின் நட்பு வீட்டில் செவ்வாய் அமர்ந்தால் தோஷமில்லை.
  • கும்பம் - சனியின் ஆட்சி வீட்டில் தொடர்பு பெற்ற செவ்வாய் அமர்ந்தால் தோஷமில்லை.

          குறிப்பு: சனி மற்றும் பார்வையால் செவ்வாய் தோஷம் விலகும் என்பதை பலர் ஏற்றுக்கொள்வதில்லை.


  • ரிஷபம், துலாம் - சுக்கிரன் வீட்டில் செவ்வாய் அமர்ந்தால் தோஷமில்லை.
          குறிப்பு: செவ்வாய் தோஷம் ஆராய்யப்படவேண்டும்.

  • லக்கினத்திலிருந்து 2-ஆம் வீடு மிதுனம், கன்னியாக இருந்து அதில் செவ்வாய் அமர்ந்தால் தோஷமில்லை.
இப்படியே பல விதிவிலக்குகள் இருக்கின்றன.

விதிவிலக்குகளில் பல ஜோதிட நூல்கள் ஒன்றுக்கொன்று முரணாக இருக்கின்றன.

செவ்வாயின் வீரியத்தை வைத்து ஆராய்ந்து நன்கு முடிவெடுப்பதே சரியான தீர்வாகும்.

செவ்வாய் தோஷ விதிவிலக்குகள் பற்றி ஆராய்ந்து எப்படி முடிவெடுக்கலாம் என்பதை பற்றியும், எந்தெந்த ராசிகளுக்கு செவ்வாய் தோஷம் சாத்தியமாக இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவை பார்த்து தெரிந்துகொள்ளவும்.






1 comment:

  1. ஐயா வணக்கம்.
    நீங்கள் கொடுத்த விளக்கம் ரொம்ப அருமயா இருந்தது.

    நீங்கள் திருமணம் ஆவதற்கு எந்த எந்த செவ்வாய் எதுக்கு பொருந்தும் என்பதை விளக்கம் கொடுக்கவும் ஐயா.

    ReplyDelete