Thursday, June 6, 2019

செவ்வாய் தோஷம்

செவ்வாய் தோஷம் - பகுதி 1


       ஜோதிடத்தில் திருமண தடைகளாக பல தோஷங்கள் பார்க்கப்படுகின்றன. அதில் முக்கியமானது செவ்வாய் தோஷமாகும்.


      செவ்வாய் தோஷத்தைப் பற்றிய தவறுதலான புரிதல்களால் பலருடைய திருமணங்கள் குறிப்பிட்ட காலங்களில் நடக்காமல் பல வருடங்கள் தள்ளிப் போவது என்பது சர்வசாதாரணமாக நடக்கக்கூடிய வருந்தத்தக்க விஷயமாக இருக்கிறது.இதில் பெரும்பாலும் பெண்களே பாதிக்கப்படுகிறார்கள்.

செவ்வாய் தோஷம் என்றால் என்ன?
     
     ஜோதிட விதிப்படி ஒருவருடைய ஜாதகத்தில் லக்கினத்திற்கோ, சந்திரனிற்கோ அல்லது  சுக்கிரனிற்கோ 2 4 7 8 12 ஆகிய வீடுகளில் செவ்வாய் அமர்ந்தால் அது செவ்வாய் தோஷம் என்று சொல்லப்படுகிறது.

    ஜாதகத்தில் லக்னம் என்பது உயிர் அல்லது ஆன்மாவை குறிக்கும்.
சந்திரன் அமர்ந்திருக்கும் ராசிதான் நமது ஜென்ம ராசியாகும்.
சுக்ரன் என்பது நமது வாழ்க்கைத்துணையை குறைக்கக்கூடிய கிரகமாகும்.

     அதாவது லக்னம் என்கிற புள்ளி, சந்திரன் இருக்கும் ஜென்ம ராசி, சுக்கிரன் என்கிற களத்திரகாரகன் இந்த மூன்றையும் வைத்துத்தான் செவ்வாய் தோஷம் என்கிற விதியானது ஜோதிடத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

    விதி என்று இருந்தாலே விதிவிலக்கு என்பது இருக்கும்.
அதன்படி பார்த்தால் ஆயிரத்தில் ஒருத்தருக்குக்கூட செவ்வாய் தோஷம் என்பது இருக்காது என்பதை உறுதிபட கூறிவிடலாம்.

1 comment: