Friday, December 6, 2019
Thursday, June 20, 2019
சந்திராஷ்டமமா? ரிலாக்ஸ் ப்ளீஸ்..
சந்திராஷ்டம்னா என்ன?
புரியவில்லையா? விடுங்க. இந்த கட்டுரையை படுச்சு முடிக்கும்போது எல்லாம் தெரிஞ்சுவிக்கீங்க.
சோதிடத்திலே லக்கினம் என்கிறது உயிர் மாதிரின்னா ராசிங்கிறது உடல் மாதிரி. அப்படிப்பட்ட உடல் என்கிற ராசியை நிர்ணயிப்பதே சந்திரன்தாங்க.
சந்திரன் எப்படி முக்கியமானவர் என்பதை இப்ப பாக்கலாம் வாங்க.
நாம் பிறக்கும்போது வான மண்டத்திலே சந்திரன் எந்த ராசியை கடந்து கொண்டிருந்தாரோ அந்த ராசிதான் நமது ஜென்மராசிங்க.
நீங்க துலாம் ராசினா, நீங்க பிறந்த நேரத்துலே சந்திரன் துலாம் ராசியிலே சஞ்சாரம் செய்துகொண்டிருந்திருப்பார். அந்த ராசிதான் உங்க ஜென்ம ராசி.
ஒவ்வொரு ராசியிலும் 3 நட்சத்திரங்கள் இருக்கும். அப்போ சந்திரன் நீங்க பிறக்கும் போது உங்க ராசியிலே எந்த நட்சத்திரத்தின் மேல் பயணம் செய்துகொண்டிருந்தாரோ அதுதாங்க உங்க ஜென்ம நட்சத்திரம்.
பார்த்தீங்களா உங்களுடைய ராசியையும், ஜென்மநட்சத்திரத்தையும் தீர்மானிப்பது சந்திரன்தான்.
கோயிலிலே இந்த ராசி, நட்சத்திரம் சொல்லித்தானே அர்ச்சனை செய்றீங்க.
திருமண பொருத்தம் கூட ராசி, நட்சத்திரம் வச்சுத்தானே பார்க்கிறோம்.
பர்த்டே கொண்டாடறதும் நட்சத்திரம் வச்சுத்தானே.
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் 4 - கால்கள் அல்லது பாதங்கள் இருக்கிறது.
ஒவ்வொரு ராசியும் 9 - நட்சத்திர பாதங்களை கொண்டிருக்கின்றன.
நாம் பிறக்கும்போது சந்திரனானது எந்த கிரகத்தினிடைய நட்சத்திரம் மற்றும் பாதத்திலிருந்ததோ அங்கிருந்துதான் நமது தசா புத்தி கணக்கே துவங்குகிறது.
கிரகங்கள் எத்தனை காலங்கள் நன்மை அல்லது தீமை செய்யலாம் என்பதை தசா புத்தியின் மூலம் நிர்ணயிப்பதே இந்த சந்திரன்தான்.
கோள்சார பலன் சொல்வதற்கு சந்திரன் நிற்கும் ராசியை வைத்துத்தானே பலன் சொல்கிறோம்.
சந்திராஷ்டம தினத்தன்று பொதுவாக எழக்கூடிய சிக்கல்கள்
கோள்சார சந்திரன் நமது ஜென்ம ராசிக்கு எட்டாம் (அஷ்டம்) இடத்தில வரும்பொழுது சந்திராஷ்டமம் (சந்திரன் + அஷ்டம்) ஏற்பட்டு தனது பலத்தையெல்லாம் இழக்கிறார்.எட்டாம் இடம் என்பது மறைவு ஸ்தானம் மற்றும் அசுப ஸ்தானமாகும். இந்த இடத்திலே சந்திரன் நிற்கும் நிலையில் ஒருவர் மனக்குழப்பத்துடன் தன்னுடைய செயல்களைச் செய்வார் என்பதை குறிகாட்டுவதுதான் சந்திராஷ்டமம் ஆகும்.
சந்திரனை மனோகாரகன்னு சொல்லுவாங்க.
அதாவது உடலை தீர்மானிக்கும் சந்திரன் 8 -ல் மறையும்பொழுது மனோபலம் இழந்து நல்ல பலன்களை தராது கெடுபலன்களை அதிகமாக செய்வார். மறதி,மன சஞ்சலம் ஏற்படும். புத்தி தடுமாறும்.
கூடவே 8- ஆம் இடத்தின் பாவத்தன்மைகளையும் சேர்த்து செய்வார்.
வம்பு, வழக்கு, சிறைத்தண்டனை போன்றவையாகும்.
வாகனத்துக்கு காரகன் சுக்கிரன், அந்த வாகனத்தை இயக்குவதற்கு அதாவது போக்குவரத்துக்கு காரகம் வகிப்பவன் சந்திரன்.
சந்திராஷ்டம நாளில் மறதியினால் ஹெல்மட் எடுக்காம போயி போலீஸ்காரர்கிட்டே மாட்டிக்குவீங்க. அபராதம் கூட கட்ட வேண்டியிருக்கும்.
அஷ்டமத்தில் இருக்கும் சந்திரன் தனக்கு இருக்கும் 7- வது நேர்பார்வை மூலமாக லக்கினத்திற்கு அடுத்தபடியாக இருக்கும்
2-ஆம் வீடான தனம், குடும்பம், வாக்கு ஸ்தானத்தை பார்க்கிறார்.
அப்போது 2-ஆம் வீட்டின் பலன்களும் பாதிக்கின்றன.
சந்திராஷ்டம நாளிலே ஒருவர் பணம் தருகிறேன் என்று சொன்னால் பணம் அன்றைக்கு வராது. இப்போது தனம் பாதிக்கிறதல்லவா?
மன தடுமாற்றத்திலே இருக்கும் நீங்க அவரிடம் இது விஷயமா கேட்டால் தப்பாக அர்த்தம் கொண்டு அது வீண் விவாதத்தில் கொண்டு போய் முடித்து விடும்.
ஆகையினாலே சந்திராஷ்டம நாளிலே மௌனமாக இருப்பது நல்லது. வீண் விவாதங்களில் ஈடுபடக்கூடாது. அமைதி காக்கவேண்டும்.
அன்றைய தினத்தில் புதியதாக ஒரு நபர் அறிமுகம் ஆகிறாரென்றால் பிற்காலத்தில் அவர் மூலமாக பிரச்சினை வரப்போகுதுன்னு அர்த்தம்.
எந்த புதிய முயற்சியும் கூடாது.
காரிய தடை ஏற்படும்.
மனம் அலைபாய்வதால் எந்த முடிவும் உங்களால் எடுக்க முடியாது.
தவறாக பேச வைக்கும்.
தவறாக செலவு செய்ய வைக்கும்.
பணம் கொடுக்கல் வாங்கல் இருக்கக்கூடாது.
புதிதாக தொழில் தொடங்கக்கூடாது.
புதிதாக வீடு கட்டுதல் கூடாது.
கிரக பிரவேசம் நடத்தக்கூடாது.
எந்த ஒரு சுபகாரியத்தையும் சந்திராஷ்டம நாளில் வைக்கக்கூடாது.
மணமக்களுக்கு திருமண தேதியன்று சந்திராஷ்டமம் வந்தால் அன்றைய நாளில் திருமணம் செய்துவைக்கக்கூடாது.
மன சஞ்சலத்துடன் வாகனம் ஓட்டும்போது விபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
சந்திரன் பயணத்திற்கு காரகன் அல்லவா. நெடுந்தூர பிரயாணம் செய்யக்கூடாது.
அப்படியே பயணம் செய்தாலும் வண்டி சரியான நேரத்தில் போய் சேராது, சில சமயம் சக பயணிகளுடன் வீண் வாக்குவாதம் அல்லது சண்டை ஏற்படலாம்.
நீங்க என்னதான் தயாராக போனாலும் பிரச்சினை என்பது வேறு எதாவது ரூபத்தில் வந்து நிற்கும்.
புதிதாக ஏதாவது உணவை சாப்பிட்டு செரிமானம் ஆகாமல் அவஸ்தை படவேண்டியிருக்கும்.
உடல்நலக் கோளாறு ஏற்படும்.
மொத்தத்திலே அன்றைக்கு உங்களுக்கு பிடித்த இஷ்ட தெய்வத்தை நினைத்து தியானம் செய்யலாம்.
முக்கியமான காரியங்களை நாமே செய்யாமல் வேறொருவரை வைத்து செய்யலாம்.
வேலை செய்யும் இடத்துல நிதானமா பேசலாம், செயல்படலாம்.
சந்திராஷ்டமத்தின் விளைவுகளை புரிந்துகொண்டு நடந்தால் நாம் அன்றைய தினத்தில் துன்பப்பட வேண்டியதில்லை.
கிரக சேர்க்கையின் பலன்கள்
சந்திரனுடன் மற்ற பாவக்கிரகங்கள், சுபகிரகங்கள் சேர்க்கை பெற்று இருந்தால் அதற்கேற்ப பலன் மாறுபடும்.உதாரணத்துக்கு
8-ல் இருக்கும் சந்திரனுடன்..
சூரியன் சேர்ந்திருந்தால் தந்தையுடன் மனஸ்தாபமோ, சண்டையோ ஏற்படும்.
அரசு அதிகாரிகளுடன் மோதல் ஏற்படும்.
செவ்வாய் சேர்ந்திருந்தால் சகோதரர்களிடம் வீண் வாக்குவாதம், சண்டை ஏற்படும்.
நிலம் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படும்.
பெண்களுக்கு கணவருடன் மனவருத்தம் ஏற்படும்.
கோபம் சட்டென்று வரும்.
புதன் சேர்ந்திருந்தால் வியாபாரங்களில் முதலீடுகளால் பிரச்சினை.
தாய்மாமாவிடம் மனஸ்தாபம்.
புத்திசாலி என்று நினைத்து பிறர் பிரச்சினைகளில் தலையிட்டு வீணாக மாட்டிக்கொள்வது.
குரு சேர்ந்திருந்தால் பிள்ளைகளால் மனஸ்தாபம் உண்டாகும்.
பிறரால் நமக்கு அவமரியாதை ஏற்படும்.
சுக்கிரன் சேர்ந்திருந்தால் பெண்கள் வழியாக குறிப்பாக மனைவி, அக்கா, தங்கை, மாமியார் மூலமாக மனஸ்தாபங்கள் ஏற்படும்.
சனி சேர்ந்திருந்தால் நம்மைவிட கீழ்மட்டத்தில் வேலை செய்யும் பணியாளர்களுடன் விரோதம் ஏற்படும்.
மூத்த சகோதரரிடம் மனவருத்தம் ஏற்படும்.
ராகு சேர்ந்திருந்தால் போதை பழக்க வழக்கங்களுக்கு மனம் நாடிச் செல்லும். இது மற்றவர்களுக்கு தெரிந்து அவமானம் உண்டாகும்.
தந்தை வழி பாட்டிபாட்டன்களால் தொல்லை.
கேது சேர்ந்திருந்தால் தாய் வழி பாட்டி பாட்டன்களால் மனவருத்தம்.
விலகியிருந்த பிரச்சினைகளில் வேறு வழியில்லாமல் தலையிட்டு மாட்டிக்கொள்ளவேண்டிவரும்.
அதிக பாதிப்பு எப்போது இருக்கும்
28 நாட்களுக்கு ஒருமுறை சந்திராஷ்டமம் வந்து ஒரு ராசியில் 2 1/4 நாட்கள் வரை நிலைத்திருக்கும்.
அந்த 2 1/4 நாட்களின் மத்திய காலத்தில் அதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.
நட்சத்திரப்படிப் பார்த்தால் நமது ஜென்ம நட்சத்திரத்திலிருந்து
17-வது நட்சத்திரத்தில் சந்திரன் வரும்பொழுது சந்திராஷ்டமம் ஏற்படுகிறது.
உங்களது ஜென்ம நட்சத்திரம் திருவோணமாக இருந்தால் அதன் 17-வது நட்சத்திரமான பூரத்தில் சந்திரன் வரும்பொழுது சந்திராஷ்டமம் உருவாகிறது.
இன்னும் சொல்லப்போனால் உங்களது நட்சத்திர பாதத்திலிருந்து 65-வது பாதத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் காலத்தில் சந்திராஷ்டமத்தின் தாக்கம் மிகக்கடுமையாக இருக்கும். அது
எவ்வளவு நேரம் என்பதை இப்போது கணக்கிட்டுப் பார்ப்போம்.
2 1/4 நாட்கள் = (24x 2) + 6 = 54 மணி நேரம்
1 ராசிக்கு 9 நட்சத்திர பாதங்கள்
அப்படியானால் 1 பாதத்திற்கு = 54/9 = 6 மணி நேரம்
உங்களது ஜென்ம நட்சத்திரம் திருவோணம் 2-ம் பாதமென்றால் அதன் 17-வது நட்சத்திரம் பூரம் 2-ஆம் பாதத்தில் சந்திரன் வந்து சஞ்சாரம் செய்யும் அந்த 6 - மணி நேரம் மிகக்கடுமையான தாக்கத்தை தரும்.
சந்திரனானது வளர்பிறையில் சுபராவதால் குறைவாகவும், தேய்பிறையில் அசுபராவதால் அதிகமாகவும் சந்திராஷ்டமத்தின் போது அதன் தாக்கம் இருக்கும்.
சந்திரனானது வளர்பிறையில் சுபராவதால் குறைவாகவும், தேய்பிறையில் அசுபராவதால் அதிகமாகவும் சந்திராஷ்டமத்தின் போது அதன் தாக்கம் இருக்கும்.
வளர்பிறை (சுக்ல பட்சம்) அஷ்டமி முதல் தேய்பிறை (கிருஷ்ண பட்சம்) பஞ்சமி வரை பூர்ண சந்திரனாக அதாவது சுப சந்திரனாக இருக்கும்..
தேய்பிறை ஏகாதசி முதல் வளர்பிறை பஞ்சமி வரை அசுப சந்திரனாக இருக்கும்.
தேய்பிறை சஷ்டி முதல் தேய்பிறை தசமி வரை மற்றும் வளர் பிறை சஷ்டி முதல் வளர் பிறை தசமி வரை மத்திம சந்திரன் ஆகும்.
தேய்பிறை ஏகாதசி முதல் வளர்பிறை பஞ்சமி வரை அசுப சந்திரனாக இருக்கும்.
தேய்பிறை சஷ்டி முதல் தேய்பிறை தசமி வரை மற்றும் வளர் பிறை சஷ்டி முதல் வளர் பிறை தசமி வரை மத்திம சந்திரன் ஆகும்.
விதி விலக்குகள் - சந்திராஷ்டமம் தாக்கம் இல்லாத ராசிகள்
விதிகள் என்றாலே விதி விலக்குகள் கண்டிப்பாக இருக்கும். அதன்படி பார்த்தால் மிதுனம், சிம்மம், தனுசு மற்றும் கும்ம ராசிகளுக்கு சந்திராஷ்டம தாக்கம் இருக்காது என்று சோதிட விதி விலக்குகள் கூறுகின்றன.
மிதுன ராசி
சுப வீட்டதிபதியான 2-ஆம் வீட்டுச் சந்திரன் 8-ல் மறைந்து அங்கிருந்து தனது 7-வது நேர்பார்வையாக 2-ஆம் வீட்டை பார்க்கிறார். இதனால் நல்லதே நடக்கும் பாதிப்புகள் இருக்காது.
சிம்ம ராசி
12 -ஆம் வீட்டின் விரயாதிபதியான சந்திரன் 8-ல் மறைவது நல்லது.
கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்கிற அமைப்பு இந்த ராசிக்காரர்களுக்குள்ளது.
தனுசு ராசி
பொதுவாக சூரியனுக்கும் சந்திரனுக்கும் அஷ்டதிபத்ய தோஷம் கிடையாது. 8-ல் சந்திரன் இருந்தாலும் அது தன் ஆட்சி வீடாகும். ஆகையால் நல்லது செய்யவேண்டும்.
கும்ப ராசி
6-ஆம் வீட்டின் காரகங்களான கடன், நோய், எதிரி போன்றவற்றை ஏற்று 8-ல் சந்திரன் மறைவது நல்லதே. கெட்ட ஸ்தான அதிபதி 8-ல் மறைவது என்பது கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்கிற அமைப்பு இந்த ராசிக்காரர்களுக்கும் பொருந்தும்.
பொதுவாக சந்திராஷ்டம நாட்களில் நம்முடைய அன்றாட பணிகளின் போது சற்று எச்சரிக்கையுடன் இருந்து செயல்படுவது நல்லது. பொறுமையும்,அமைதியும்,நிதானமுமே இந்த நாளுக்கு மிகச்சிறந்த தீர்வாக இருக்கும்.
நன்றி!
Monday, June 10, 2019
காலசர்ப்ப தோஷம் என்ன செய்யும்
நிழல் கிரகங்களான ராகுவிற்கும் கேதுவிற்கு இடையில் மற்ற ஏழு கிரகங்கள் அனைத்தும் அமர்ந்திருக்கும் அல்லது சிக்கியிருக்கும் கால நிலையே காலசர்ப்ப தோஷம் எனப்படும்.
Thursday, June 6, 2019
Subscribe to:
Posts (Atom)